குவைத்தில் ஒட்டகம் மேய்க்க மறுத்ததால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்.. "விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் உடலை கொண்டு வர நடவடிக்கை" - வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை தகவல்
குவைத் நாட்டில் சுட்டுகொல்லப்பட்ட திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகுமரன் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் அவரது உடலை தாயகம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது.
கூத்தாநல்லூரை சேர்ந்த முத்துகுமரனை, உரிய பணியில் அமர்த்தாமல் ஒட்டகம் மேய்க்கும்படி முதலாளி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்து, அவர் தாயகம் திரும்ப முயற்சி செய்துகொண்டிருந்த வேலையில், 7ம் தேதி அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது
Comments